புலம் பெயர்ந்த பெண்களுக்கு ஆலோசனை அளித்தல்

FiZ Fachstelle Frauenhandel und Frauenmigration

நாங்கள் புலம் பெயர்ந்த பெண்களுக்கு ஆலோசனை அளித்து, அவர்கள் தங்களைச் சுரண்டலில் இருந்தும் வன்முறையில் இருந்தும் காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவி அளிக்கிறோம். மேலும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், நலன்களை பாதுகாக்கவும், சிரமமான சூழ்நிலையிலிருந்து வெளியேறவும் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். இவை அனைத்தும் மிகவும் இரகசியமாக, கட்டணமின்றி.

நாங்கள் யாருக்கு ஆலோசனை அளிக்கிறோம்?

  • குடும்ப வாழ்க்கையிலோ, வேலை செய்யும் இடத்திலோ, அல்லது வேறெங்கோ வன்முறையாலும், சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த பெண்கள்
  • குடியேறும் உரிமை சார்ந்த பிரச்சினைகள் கொண்ட அல்லது தங்கும் உரிமைக்காக பிறரைச் சார்ந்திருக்கும் புலம் பெயர்ந்த பெண்கள்
  • பாலியல் துறையில் பாலியல் தொழிலாளியாக, காபரெட் நடனமாடுபவராக அல்லது ஆபாசப்பட நடிகையாக தொழில் புரியும் புலம் பெயர்ந்த பெண்கள்

எங்கள் பணி சூரிச் நகரில் வாழும் புலம் பெயர்ந்த பெண்களை மையப்படுத்தி உள்ளது. மற்ற மண்டலங்களில் இருந்து வரும் வினவல்கள், அவற்றின் அவசரத்திற்கேற்ப அருகிலுள்ள ஆலோசனை மையங்களுக்கு பகிரப்படும். 

நாங்கள் கீழ்க்காணும் விஷயங்கள்
குறித்து தகவல்கள் அளிக்கிறோம்:

  • குடியேறும் உரிமை, பணி புரியும் உரிமை, திருமணம் மற்றும் விவாகரத்து சார்ந்த உரிமைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகோரும் உரிமைகள்
  • சுவிஸ் நாட்டின் பாலியல் தொழில் குறித்த சட்ட கட்டமைப்பு
 
கீழ்க்காணும் விஷயங்களில் உதவி புரிகிறோம்
  • மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நிலையான தீர்வுகள் தேடுதல்
  • நலன்களை பாதுகாக்கும் முயற்சிகள் மற்றும் சட்டப்பூர்வமான உரிமைக்கோரல்கள்
  • அரசு அலுவலகங்கள், அலுவலர்கள், பணியளிப்பவர்கள்;, வாடகைக்கு விடுபவர், சமூகக் காப்புறுதி அலுவலர்கள் மற்றும் இன்ன பிறருடன் தொடர்பு கொள்ளுதல்
 
நாங்கள் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
  • பிற ஆலோசனை மற்றும் உதவி மையங்கள்
  • அனுபவமிக்க இருபாலரைச் சார்ந்த வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், மற்றும் நிபுணர்கள்
 

தமேலும் தகவல்

  • சூரிச் நகரம் "சுகாதாரம் அல்லாத காப்பீடு" திட்டத்தை வழங்குகிறது. உடல்நலக் காப்பீடு இல்லாதவர்களுக்கு அவர்கள் அணுகக்கூடிய மருத்துவச் சலுகைகள் பற்றித் தெரிவிக்கப்படுகிறது. இங்கே நீங்கள் நேரடியாக திட்ட வலைத்தளத்திற்குச் செல்லலாம்.
     
  • PROKORE ஆனது பாலியல் தொழிலாளர்களுக்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. LEXI APP ஆனது சுவிட்சர்லாந்தில் பாலியல் வேலை குறித்த முக்கியமான தகவல்களை வழங்குகிறது. 12 வெவ்வேறு மொழிகளில், இது பாதுகாப்பு, உடல்நலம், வேலை, வரிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
     
    பயன்பாடு Apple
    பயன்பாடு Android

 

தொடர்பு 

FIZ பெண்கள் கடத்தல்
மற்றும் பெண்கள் புலம்
பெயர்தலுக்கானத் துறை

(FIZ Fachstelle
Frauenhandel und Frauenmigration)

Hohlstrasse 511
8048 Zürich
044 436 90 00
contact@fiz-info.ch